கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே பரங்கிபேட்டை பகுதியில் அனிதா என்பவர் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். இன்று தீபாவளியை முன்னிட்டு அப்பகுதியில் உள்ள சிறுவர்கள் ராக்கெட் வெடி வெடித்துள்ளனர்.
அப்போது ஒரு ராக்கெட் அனிதாவின் குடிசை வீட்டில் விழுந்து வெடித்து சிதறியது. குடிசை தீப்பிடித்து எரிய தொடங்கியது. தகவல் அறிந்து தீயணைப்புத்துறையினர் வருவதற்குள் வீடு முழுவதும் எரிந்து தீக்கரையானது.
இதில் வீட்டில் இருந்த பிரிட்ஜ், டிவி, நகை மற்றும் கல்வி சான்றிதழ்கள் போன்றவை எரிந்து நாசமானது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.