கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து உடல்நலக்குறைவின் காரணமாக காலமானார்
கலைஞர் கருணாநிதிக்கும் பத்மாவதிக்கும் மகனாய் பிறந்தவர் தான் மு.க.முத்து அரசியலில் இவர் அறிமுகம் இல்லை என்றாலும் தமிழ் சினிமாவிற்கு இவர் பரீட்சையமானவர். நடிகர் எம்.ஜீ.ஆர் மீது இவர் வைத்திருந்த பாசத்தினால் திமுகவில் இருந்து எம்ஜிஆர் விலகிய பின்னர் அவரும் திமுகவில் இணைவதை நிறுத்திக்கொண்டார், குறிப்பாக எம்.ஜீ.ஆரை போலவே உடை, நடை, பாவனைகளோடு நடித்து மு.க.முத்து, தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தார்
தொடக்கக் காலத்தில் மு.க.முத்து நடித்த சில படங்கள் வெற்றி அடைய, அடுத்த எம்ஜிஆராக வருவார் என்று அப்போது பேசப்பட்டது. ஆனால் பிள்ளையோ பிள்ளை, பூக்காரி, சமையல்காரன், அணையா விளக்கு, நம்பிக்கை நட்சத்திரம் போன்ற படங்கள் படுதோல்வியை சந்தித்தால் தமிழ் சினிமாவில் தனக்கென்று இடத்தை பிடிக்க முடியாமல் நிலை தடுமாறினார்.
அதன் பின்னர் தந்தை கருணாநிதியுடன் ஏற்பட்ட மனக்கசப்பின்னால் குடும்பத்தை விட்டு விலகி தனியே வாழ்ந்து வந்தார். இதனிடையே அவருக்கு பணம் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டதால், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து நிதியுதவி பெற்றுக்கொண்டார்
இதனால் அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருள் ஆனது.. அதன் பின்னர் அவர் குடும்பத்தை விட்டு தனித்தே வாழ்ந்து வந்த நிலையில் அவரது உடல்நலம் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.. அவரது உடல் சென்னை ஈச்சம்பாக்கத்தில் அவருடைய இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.