கோயில் பிரசாதம் சாப்பிட 51 பேருக்கு வயிற்றுப்போக்கு…மருத்துவமனையில் அனுமதி

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள ஹூலிகட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற பைரேஸ்வர் கரிம்மா தேவி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தற்போது வருடாந்திர உற்சவ திருவிழா நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் திருவிழாவின்போது பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த பிரசாதத்தை சாப்பிட்ட சிலருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட 51 பேரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டனர். இதில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News